"தமிழ் மொழி என்பது கடல் போன்றது. அது இடத்திற்கு இடம் மாறும் அழகிய கிளைமொழிகளைக் கொண்டது. தமிழகத்திலும் இலங்கையிலும் பேசப்படும் தமிழ் ஒரே மொழியாக இருந்தாலும், அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய தனித்துவமான 'பிரதேச வழக்குச் சொற்கள்' (Regional Dialects) தமிழின் இனிமையைக் கூட்டுகின்றன. குறிப்பாக, இலங்கைத் தமிழ் பாடத்திட்டத்தில் தரம் 11 மாணவர்களுக்கு இந்தப் பகுதி மிக முக்கியமானது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்னிலங்கை பகுதிகளில் புழக்கத்தில் உள்ள சுவாரசியமான பிரதேச வழக்குச் சொற்களை இந்த வினாடி வினா (Quiz) மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். உங்களால் எத்தனை வினாக்களுக்குச் சரியாக விடையளிக்க முடிகிறது என்று இப்போதே சோதித்துப் பாருங்கள்!"
![]() |
| பிரதேச வழக்குச் சொற்கள் தரம் 11 |
பிரதேச வழக்குச்
சொற்கள் தரம் 11 - Tamil Exam
Practice Online
ஒரு
மொழியில் எப்போதும் பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய
இரண்டு வடிவங்களும் வழக்கில் உள்ளன. மக்கள் அன்றாடத் தொடர்பாடல்களின் போது பேச்சு
மொழியையே கையாளுகின்றனர். அத்தகைய பேச்சு மொழிகள் பிரதேசத்திற்குப் பிரதேசம்,
சமூகத்திற்குச் சமூகம் வேறுபட்டு அமையும். அவற்றையே பிரதேச வழக்குச்
சொற்கள், சமூக வழக்குச் சொற்கள் என வகைப்படுத்துவர்.
பிரதேசக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி என்பதும் இதுவே.
ஒரு
பிரதேசத்தின் பண்பாடு, கலாசாரம் என்பவற்றைப்
பிரதிபலிப்பனவாக இச் சொற்கள் அமைந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரைவிலக்கண ரீதியாகக் குறிப்பிட்டால் பிரதேச வழக்கு என்பது குறித்த
பிரதேசத்திற்குரிய தனித்துவமான சொல்வழக்குகளைக் கொண்டிருப்பது ஆகும்.
பிரதேச
வழக்குகளின் வகைப்பாடு
1. வடக்கு
பிரதேச வழக்கு
2. கிழக்குப்
பிரதேச வழக்கு
3. தென்னிலங்கை
வழக்கு
4. மேற்குப்
பிரதேச வழக்கு
5. மலையகப்
பிரதேச வழக்கு
01) வடக்கு
பிரதேச வழக்குச் சொற்கள் (Northern Dialect)
|
பிரதேச
வழக்கு |
பொது
வழக்கு |
|
1.
ஆறுதலா |
மெதுவாக |
|
2.
இயத்து, ஏனம் |
சமையற்
பாத்திரங்கள் |
|
3.
எப்பன், ஒரேப்பன் |
சிறிதளவு |
|
4.
கணக்க |
நிறைய |
|
5.
கெதியா |
விரைவாக |
|
6.
பேந்து, பிறகு |
பின்பு |
|
7.
புளகம், புளுகு |
மகிழ்ச்சி |
|
8.
முடக்கு |
பாதைத்திருப்பம் |
|
9.
மோன் |
மகன் |
|
10.
மோள் |
மகள் |
|
11.
விறாந்தை |
முன்கூட்டம்
(Verandah) |
|
12.
வெள்ளாமை |
வேளாண்மை |
|
13.
மெள்ள |
மெல்ல |
|
14.
காத்து |
காற்று |
|
15.
தேள்வை |
தேவை |
02) கிழக்குப்
பிரதேச வழக்குச் சொற்கள் (Eastern Dialect)
|
பிரதேச
வழக்கு |
பொது
வழக்கு |
|
1.
அத்தாங்கு |
மீன்
பிடிக்கும் கைவலை |
|
2.
அணியம் |
தோணியின்
முன்பக்கம் |
|
3.
அளவாய்க்கரை |
கடற்கரையோரம் |
|
4.
ஆணம் |
சொதி,
குழம்பு |
|
5.
ஏனம் |
பாத்திரம் |
|
6.
ஒண்ணா |
முடியாது |
|
7.
ஒள்ளுப்பம் |
எள்ளிலும்
சிறியது |
|
8.
கக்கிசம் |
தொல்லை |
|
9.
கடப்படி |
வாசல் |
|
10.
களவட்டி |
சூடுபொருந்தளம் |
|
11.
கெறுவம் |
கர்வம் |
|
12.
கேணி |
சாக்கு |
|
13.
சங்கை |
ரோசம் |
|
14.
சார் |
ஏர்
செல்லும் வழி |
|
15.
சிறாம்பு |
பரண் |
|
16.
சும்மாடு |
சுமை
தாங்க தலையில் வைக்கும் அடை |
|
17.
சோங்கன் |
சோம்பேறித்தனம் |
|
18.
தலைமுறை |
வாய்க்கால்
பிரிந்து செல்லும் வயற்பரப்பு |
|
19.
துரைக்காரன் |
படகோட்டுபவன் |
|
20.
மண்டா |
மீன்
குத்தும் தடி |
|
21.
வெள்ளோடன் |
தேங்காய் |
|
22.
வேலைக்காரன்கம்பு |
வைக்கோல்
இழுக்கும் தடி |
|
23.
தரவை |
ஆழங்குறைந்த
நீர்ப்பகுதி |
|
24.
தூரவு |
சிறு
கேணி |
|
25.
மறுகா |
பின்பு
/ பிறகு |
03) தென்னிலங்கைப்
பிரதேச வழக்குச் சொற்கள் (Southern Dialect)
|
பிரதேச
வழக்கு |
பொது
வழக்கு |
|
1.
ஆப்ப |
அப்பம் |
|
2.
இடியப்ப |
இடியப்பம் |
|
3.
சல்லி |
பணம்,
காசு |
|
4.
பகந்து |
அழகு |
|
5.
உடுலோகு |
மணிக்கூடு
/ கடிகாரம் |
04) மேற்குப்
பிரதேச கிளைமொழிச் சொற்கள் (Western Dialect)
|
பிரதேச
வழக்கு |
பொது
வழக்கு |
|
1.
அன்ன |
அன்னம் |
|
2.
பொன்ன |
பொன்னை |
|
3.
நம்மளுவொமுக்கு |
எங்களுக்கு |
05) மலையகப்
பிரதேச வழக்குச் சொற்கள் (Upcountry Dialect)
|
பிரதேச
வழக்கு |
பொது
வழக்கு |
|
1.
எலை |
இலை |
|
2.
பொழப்பு |
பிழைப்பு |
|
3.
வெரசா |
விரைவாக |
|
4.
எஸ்தோர் |
தொழிற்சாலை
(Store) |
|
5.
சாவல் |
சேவல் |
|
6.
நெறை |
நிரை
/ வரிசை |
|
7.
கிராக்கி |
கேள்வி |
|
8.
கொந்தரப்பு |
தேயிலைத்
தோட்டத்தில் துப்புரவு செய்தல் |
|
9.
கணாங்கி |
தாமதித்து |
|
10.
றாத்தல் |
நிறை
(Pound) |
|
11.
நார்க்குச்சி |
முற்றிய
குச்சி |
|
12.
செக்ரோல் |
வேலைப்
பதிவுப்புத்தகம் |
|
13.
பொடசக்காரி |
பொறாமைக்காரி |
|
14.
மாரடித்தல் |
போராடுதல் |
|
15.
ஒப்புராணை |
சத்தியமாக |
"மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல; அது
ஒரு இனத்தின் அடையாளம். இந்தப் பிரதேச வழக்குச் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு மண்ணின்
வாசனையைத் சுமந்து நிற்கின்றன. தரம் 11 மாணவர்களின் தேர்வு
நோக்கத்திற்காகவும், தமிழ் ஆர்வலர்களின் பொது அறிவுத்
தேடலுக்காகவும் இந்த வினாடி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி
உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் மதிப்பெண் என்ன
என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிருங்கள். இது போன்ற மேலும் பல தமிழ் இலக்கண
மற்றும் வினாடி வினாப் பயிற்சிகளுக்குத் தொடர்ந்து Tamil Quiz Zone உடன் இணைந்திருங்கள்."
