வினாடி வினா (Quiz)
⏱️ காலம்: 00:00
1. விவேகசிந்தாமணி
"தண்டாமரை உடன் பிறந்தும்
தண்டேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடையிருந்து
வந்து கமல மது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித்
தம்மில் கலப்பார் கற்றோரே.
தண்டேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடையிருந்து
வந்து கமல மது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித்
தம்மில் கலப்பார் கற்றோரே.
1. இப்பாடலில் 'தாமரையுடன் பிறந்திருந்தும் அதன் தேனை உண்ணாதது' எது எனக் குறிப்பிடப்படுகிறது?
2. காட்டிலிருந்து வந்து தாமரை மலரில் உள்ள தேனை உண்பதாகக் கூறப்படுவது எது?
3. இப்பாடல் உணர்த்தும் பிரதான நீதிக்கருத்து யாது?
4. "மண்டூகம்" என்பதன் கருத்து யாது?
5. "தண்டாமரை" என்பதன் பொருள் யாது?
6. "பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்...." இங்கு புல்லர் என குறிப்பது யாரை?
7. " வண்டோ கானகத்து இடையிருந்து வந்து கமல மது உண்ணும்...." இங்கு "கானகம்" என குறிப்பிடப்படுவது எது?
8. " வண்டோ கானகத்து இடையிருந்து வந்து கமல மது உண்ணும்...." இங்கு "கமல மது" என குறிப்பிடப்படுவது எது?
9. இப்பாடலில் வந்துள்ள அணி எது?
10. இப்பாடலில் வந்துள்ள உவமையயின் விளக்கம் "அறிவற்றோர்" உவமானம், உவமேயம், பொதுத்தன்மை முறையே ?
11. இப்பாடலில் வந்துள்ள உவமையயின் விளக்கம் "அறிவுடையவர்" உவமானம், உவமேயம், பொதுத்தன்மை முறையே ?
2. வெற்றிவேற்கை - பாடல் 01
"தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழல் ஆகாதே
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள் நீர்க் கயத்து சிறு மீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகுமே அதனால்
பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியோரும் அல்லர்".
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழல் ஆகாதே
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள் நீர்க் கயத்து சிறு மீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகுமே அதனால்
பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியோரும் அல்லர்".
1. வான் உயர வளர்ந்தாலும் பனைமரம் எதனைத் தருவதில்லை?
2. "வான் உற ஓங்கி..." என்னும் தொடரில் அமைந்த அணி எது?
3. "தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை..." இங்கு "தேம்படு" என்பதன் பொருள் யாது?
4. "தெள் நீர்க் கயத்து சிறு மீன் சினையிலும் நுண்ணிதே ஆயினும்..." இங்கு "கயம்" என்பது உணர்த்தும் பொருள் யாது?
5. "தெள் நீர்க் கயத்து சிறு மீன் சினையிலும் நுண்ணிதே ஆயினும்..." இங்கு "சினை" என்பதால் நீர் விளங்கிக் கொள்வது.
6. "அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு..." இங்கு "அண்ணல் யானை" என்பது உணர்த்தும் பொருள் யாது?
7. "அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு..." இங்கு குறிப்பிடப்படும் படைகள் எத்தனை?
8. இப்பாடலில் கூறப்படும் பிரதான நீதிக்கருத்து யாது.
9. இப்பாடலில் வந்துள்ள உவமையயின் விளக்கம் "பனை மரத்தின் உருவம்" உவமானம், உவமேயம், பொதுத்தன்மை முறையே ?
10. இப்பாடலில் வந்துள்ள உவமையயின் விளக்கம் "ஆலமரத்தின் உருவம்" உவமானம், உவமேயம், பொதுத்தன்மை முறையே ?
3. வாக்குண்டாம் (மூதுரை)
"அடக்கம் உடையார் அறிவிலார் என்று எண்ணிக்
கடக்க கருதவும் வேண்டாம்-
மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு "
கடக்க கருதவும் வேண்டாம்-
மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு "
1. கொக்கு எதன் வருகைக்காகக் காத்திருக்கும்?
2. கொக்கின் இச்செயல் எத்தகைய மனிதருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது?
3. "மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு" இங்கு மடத்தலை என்பதன் கருத்தது யாது?
வாடி இருக்குமாம் கொக்கு" இங்கு மடத்தலை என்பதன் கருத்தது யாது?
4. "மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு" இங்கு உறுமீன் என்பதன் கருத்தது யாது?
5. "அடக்கம் உடையார் அறிவிலார் என்று எண்ணிக்
கடக்க கருதவும் வேண்டாம்" கடக்கக் கருத.. எனும் தொடர் தரும் பொருள் யாது?
6. "அடக்கம் உடையார் அறிவிலார் என்று எண்ணிக்
கடக்க கருதவும் வேண்டாம்" அடக்கமுடையவரை எவ்வாறு கருதக்கூடாது.
7. "இப்பாடலின் பிரதான நீதிக்கருத்து யாது?.
4. திரிகடுகம்
"கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் பார்த்து உண்ணும்
தன்மை இல்லாளர் அயல் இருப்பும் இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல"
மூத்தோரை இல்லா அவைக்களனும் பார்த்து உண்ணும்
தன்மை இல்லாளர் அயல் இருப்பும் இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல"
1. பாடலின் படி நன்மை தராத விடயங்கள் எத்தனை?
2. 'கணக்காயர்' என்னும் சொல் யாரைக் குறிக்கிறது?
3. 'பிணக்கு அறுத்தல்' என்னும் சொல் உணர்துவது யாது?
4. 'மூத்தோர்' என்னும் சொல் யாரைக் குறிக்கிறது?
5. 'அவைக்களன்' என்பதன் பொருள் யாது?
6. இப்பாடலில் மூத்தோரிடம் எதிர்ப்பார்க்கப்படும் கடமை யாது?
7. "பார்த்துண்ணும்" என்பதன் கருத்து யாது?
8. "திரிக்கடுகம்" என்பதன் பொருள்?
9. "திரிக்கடுகம்" என்பதி்ல் அடங்கியுள்ள 3 மருந்து பொருள்களும் எவை?
5. முதுமொழி வெண்பா
"உப்பிலாக் கஞ்சியினை உண்ணும் அறுசுவை போல்
தப்பிய கந்தைப் பீதாம்பரம் போல் ஒப்பும்
பனையோலைப் பாயில் படுத்து உறங்கும் வாழ்வார்
மனம் கொண்டது மாளிகை"
தப்பிய கந்தைப் பீதாம்பரம் போல் ஒப்பும்
பனையோலைப் பாயில் படுத்து உறங்கும் வாழ்வார்
மனம் கொண்டது மாளிகை"
1. இந்நூல் யாரால் இயற்றப்பட்டது?
2. இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதுமொழி யாது?
3. 'பீதாம்பரம்' என்பதன் பொருள் யாது?
4. மனம் கொண்டதே மாளிகை என்ற முதுமொழிக்கு நிகரான பழமொழி யாது?
5. இப்பாடலில் "உப்பில்லாக் கஞ்சி" என கூறப்படுவது யாது?
6. இப்பாடலின் பிரதான நீதிக்கருத்து யாது?
6. நாலடியார்
"யானை அனையவர் நண்பு ஒரிஇ நாய் அனையார்
கேண்மை தழீஇக் கொளல் வேண்டும்- யானை
அறிந்திருந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்"
கேண்மை தழீஇக் கொளல் வேண்டும்- யானை
அறிந்திருந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்"
1. நாலடியார் பாடலின் படி யாருடைய நட்பை விலக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது?
2. எத்தகையோருடன் சேர்ந்திருப்பது இனிமையானது?
3. இப்பாடலில் "நண்பு ஒரிஇ" என்பதன் கருத்து யாது?
4."கேண்மை" என்பதன் கருத்து யாது?
5."மெய்யதா" என்பதன் கருத்து யாது?
6.இப்பாடலில் வந்துள்ள பிரதான நீதிக் கருத்து யாது?
7. இனியவை நாற்பது
"கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரை சேர்தல் மிகமான முன் இனிதே
எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்றல் இனிது"
மிக்காரை சேர்தல் மிகமான முன் இனிதே
எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்றல் இனிது"
1. இப்பாடல் யாரால் பாடப்பட்டது?
2. யாரின் முன்பாக கல்வி உரைத்தல் இனிமையானது?
3. "எள்துணையும்" என்பதால் கருதப்படுவது யாது?
4. "எத்துணையும்" என்பதால் கருதப்படுவது யாது?
5. "ஈதல் " என்பதன் ஒத்த கருத்து யாது?
உங்களது புள்ளியை பார்வையிட கீழ்வரும் படிவத்தை பூரணப்படுத்தவும். (User Details)
இணையவழிப் பயிற்சி நிறைவடைந்தது!
மொத்த வினாக்கள்
0
சரியானவை
0
தவறானவை
0
எடுத்த நேரம்
00:00
இறுதி மதிப்பெண்: 0 / 100
| பாடலின் தலைப்பு | சரியானவை | மதிப்பெண் |
|---|
