| ஆக்கப்பெயர் |
பெயர்ச்சொற்களை அவற்றின்
இலக்கணத்தொழிற்பாட்டிற்கமைய மாற்றுப்பெயர், ஆக்கப்பெயர், கூட்டுப்பெயர்,
தொழிற்பெயர், வினையாலனையும் பெயர் என வகைப்படுத்தலாம். மாற்றுப்பெயர் என்றால்
என்ன ? என்பது தொடர்பான பதிவானது எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தப்பதிவில் நாம் ஆக்கப்பெயர் என்றால் என்ன என்பதனை அறிந்துக்கொள்வோம்.
ஆக்கப்பெயர்
ஆக்கப்பெயர் என்பது ஒரு பெயர்ச்சொல்லுடனோ அல்லது
வினைச்சொல்லுடனோ ஒரு விகுதி சேர்ந்து ஆக்கப்படும் பெயர்ச்சொல்லினை ஆக்கப்பெயர்
என்போம். பின்வரும் சொற்களை நோக்குவோம். கொடையாளி,
புத்திசாலி, அறிவாளி இச்சொற்கள் ஆக்கப்பெயர்களாகும். இப்பெயர்ச்சொற்கள்
பின்வருமாரு ஆக்கப்பெயர்களாக ஆக்கப்படுகின்றன.
கொடையாளி
கொடை + ஆளி = கொடையாளி இங்கு கொடை எனும் பெயர்ச்சொல்லுடன் ஆளி எனும் விகுதி சேர்ந்து கொடையாளி என ஆக்கப்பட்டுள்ளது.
புத்திசாலி
புத்தி + சாலி = புத்திசாலி இங்கு புத்தி எனும் பெயர்ச்சொல்லுடன் சாலி எனும் விகுதி சேர்ந்து புத்திசாலி எனும் பெயர்ச்சொல் ஆக்கப்பட்டுள்ளது.
அறிவாளி
அறிவு + ஆளி = அறிவாளி இங்கு அறிவு
எனும் பெயர்ச்சொல்லுடன் ஆளி எனும் விகுதி சேர்ந்து அறிவாளி எனும் ஆக்கப்பெயர் ஆக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர்ச்சொற்களை ஆக்கப்பயன்படும் விகுதிகளை
ஆக்கப்பெயர் விகுதிகள் என அழைப்போம்.
பெயர், வினை அடிகள் தவிர்ந்தவேறு பல
அடிகளுடனும் இவ் விகுதிகள் சேர்ந்து ஆக்கப்பெயர்ளை உருவாக்குகின்றன. உதாரணமாக முதியோர்,பெரியோர்,
சிறியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், கீழோர், மேலோர் போன்ற சொற்களை கூறலாம்.
பெயர்ச்சொற்களுடன் பெயர் விகுதிகள் சேர்ந்து எவ்வாறு ஆக்கப்பெயர்கள் உருவாகுகின்றன என்பதனை நோக்குவோம்.
ஆக்கப்பெயர் விகுதிகள்
ஆளி, இயல், சாலி, காரன், காரி, ஆளன், இயம், துவம், தனம் போன்ற விகுதிகள் ஆக்கப் பெயர் விகுதிகளுக்கு சில உதாரணங்களாகும். இவ் விகுதிகள் பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து ஆக்கப்பெயர்ளை உருவாக்குகின்றன.
பெயர் +
விகுதி = பெயர் என்ற முறையில் ஆக்கப்பெயர்கள் உருவாகுகின்றன.
|
பெயர் |
+ |
ஆளி |
= |
பெயர் |
|
முதல் |
+ |
ஆளி |
= |
முதலாளி |
|
தொழில் |
+ |
ஆளி |
= |
தொழிலாளி |
|
கடன் |
+ |
ஆளி |
= |
கடனாளி |
|
நோய் |
+ |
ஆளி |
= |
நோயாளி |
|
பெயர் |
+ |
சாலி |
= |
பெயர் |
|
புத்தி |
+ |
சாலி |
= |
புத்திசாலி |
|
திறமை |
+ |
சாலி |
= |
திறமைசாலி |
|
தந்திரம் |
+ |
சாலி |
= |
தந்திரசாலி |
|
அதிர்ஷ்டம் |
+ |
சாலி |
= |
அதிர்ஷ்டசாலி |
|
பெயர் |
+ |
இயல் |
= |
பெயர் |
|
அறிவு |
+ |
இயல் |
= |
அறிவியல் |
|
உளம் |
+ |
இயல் |
= |
உளவியல் |
|
புவி |
+ |
இயல் |
= |
புவியியல் |
|
பொருள் |
+ |
இயல் |
= |
பொருளியல் |
|
பெயர் |
+ |
காரன் |
= |
பெயர் |
|
பால் |
+ |
காரன் |
= |
பாற்காரன் |
|
கடை |
+ |
காரன் |
= |
கடைக்காரன் |
|
பணம் |
+ |
காரன் |
= |
பணக்காரன் |
|
பைத்தியம் |
+ |
காரன் |
= |
பைத்தியக்காரன் |
|
பெயர் |
+ |
காரி |
= |
பெயர் |
|
பால் |
+ |
காரி |
= |
பாற்காரி |
|
கடை |
+ |
காரி |
= |
கடைக்காரி |
|
பணம் |
+ |
காரி |
= |
பணக்காரி |
|
பைத்தியம் |
+ |
காரி |
= |
பைத்தியக்காரி |
|
பெயர் |
+ |
துவம் |
= |
பெயர் |
|
சமம் |
+ |
துவம் |
= |
சமத்துவம் |
|
முதலாளி |
+ |
துவம் |
= |
முதலாளித்துவம் |
|
காலனி |
+ |
துவம் |
= |
காலனித்துவம் |
|
சகோதரம் |
+ |
துவம் |
= |
சகோதரத்துவம் |
|
பெயர் |
+ |
தனம் |
= |
பெயர் |
|
கோழை |
+ |
தனம் |
= |
கோழைத்தனம் |
|
புத்திசாலி |
+ |
தனம் |
= |
புத்திசாலித்தனம் |
|
வெறி |
+ |
தனம் |
= |
வெறித்தனம் |
|
அசடு |
+ |
தனம் |
= |
அசட்டுத்தனம் |
|
பெயர் |
+ |
ஆளன் |
= |
பெயர் |
|
வெற்றி |
+ |
ஆளன் |
= |
வெற்றியாளன் |
|
அறிவு |
+ |
ஆளன் |
= |
அறிவாளன் |
|
திறமை |
+ |
ஆளன் |
= |
திறமையாளன் |
|
பேச்சு |
+ |
ஆளன் |
= |
பேச்சாளன் |
|
பெயர் |
+ |
இயம் |
= |
பெயர் |
|
பெண் |
+ |
இயம் |
= |
பெண்ணியம் |
|
முதலாளி |
+ |
இயம் |
= |
முதலாளியம் |
மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்கள் உங்களுக்கு ஆக்கப்பெயர் தொடர்பான தெளிவான விளக்கத்தினை அளித்திருக்கும். ஆக்கப்பெயர்கள் இரண்டு ஆக்கப்பெயர் விகுதிகள் சேர்ந்தும் ஆக்கப்படுகின்றன. அவ்வாறு ஆக்கப்படும் சொற்களுக்கு சில
| ஆக்கப்பெயர் |
உதாரணங்கள்
|
பெயர் |
+ |
விகுதி |
+ |
விகுதி |
= |
பெயர் |
|
புத்தி |
+ |
சாலி |
+ |
தனம் |
= |
புத்திசாலித்தனம் |
|
அறிவு |
+ |
ஆளி |
+ |
தனம் |
= |
அறிவாளித்தனம் |
|
கெட்டி |
+ |
காரன் |
+ |
தனம் |
= |
கெட்டிக்காரத்தனம் |
|
முதல் |
+ |
ஆளி |
+ |
துவம் |
= |
முதலாளித்துவம் |
| ஆக்கப்பெயர் |
உதாரணங்கள்
|
வினை |
+ |
ச்சி |
= |
பெயர் |
|
எழு |
+ |
ச்சி |
= |
எழுச்சி |
|
உணர் |
+ |
ச்சி |
= |
உணர்ச்சி |
|
தேர் |
+ |
ச்சி |
= |
தேர்ச்சி |
|
மலர் |
+ |
ச்சி |
= |
மலர்ச்சி |
|
வினை |
+ |
சி |
= |
பெயர் |
|
முயல் |
+ |
சி |
= |
முயற்சி |
|
பயில் |
+ |
சி |
= |
பயிற்சி |
|
ஆள் |
+ |
சி |
= |
ஆட்சி |
|
நீள் |
+ |
சி |
= |
நீட்சி |
|
வினை |
+ |
அம் |
= |
பெயர் |
|
அகல் |
+ |
ஆம் |
= |
அகலம் |
|
ஆழ் |
+ |
ஆம் |
= |
ஆழம் |
|
உயர் |
+ |
ஆம் |
= |
உயரம் |
|
நீள் |
+ |
ஆம் |
= |
நீளம் |
|
வினை |
+ |
ச்சல் |
= |
பெயர் |
|
எரி |
+ |
ச்சல் |
= |
எரிச்சல் |
|
பாய் |
+ |
ச்சல் |
= |
பாய்ச்சல் |
|
புகை |
+ |
ச்சல் |
= |
புகைச்சல் |
|
ஓய் |
+ |
ச்சல் |
= |
ஓய்ச்சல் |
|
வினை |
+ |
க்கை |
= |
பெயர் |
|
அறி |
+ |
க்கை |
= |
அறிக்கை |
|
வாழ் |
+ |
க்கை |
= |
வாழ்க்கை |
|
உடு |
+ |
க்கை |
= |
உடுக்கை |
|
படு |
+ |
க்கை |
= |
படுக்கை |
|
வினை |
+ |
ப்பு |
= |
பெயர் |
|
நடி |
+ |
ப்பு |
= |
நடிப்பு |
|
அடை |
+ |
ப்பு |
= |
அடைப்பு |
|
வெடி |
+ |
ப்பு |
= |
வெடிப்பு |
|
துடி |
+ |
ப்பு |
= |
துடிப்பு |
|
வினை |
+ |
ஐ |
= |
பெயர் |
|
நில் |
+ |
ஐ |
= |
நிலை |
|
கொல் |
+ |
ஐ |
= |
கொலை |
|
நட |
+ |
ஐ |
= |
நடை |
|
தடு |
+ |
ஐ |
= |
தடை |
|
வினை |
+ |
கை |
= |
பெயர் |
|
கொள் |
+ |
கை |
= |
கொள்கை |
|
செல் |
+ |
கை |
= |
செல்கை |
|
நடு |
+ |
கை |
= |
நடுகை |
|
வா |
+ |
கை |
= |
வருகை |
|
வினை |
+ |
வு |
= |
பெயர் |
|
உயர் |
+ |
வு |
= |
உயர்வு |
|
தாழ் |
+ |
வு |
= |
தாழ்வு |
|
கழி |
+ |
வு |
= |
கழிவு |
|
பிரி |
+ |
வு |
= |
பிரிவு |
|
வினை |
+ |
மை |
= |
பெயர் |
|
பொறு |
+ |
மை |
= |
பொறுமை |
|
கொடு |
+ |
மை |
= |
கொடுமை |
|
சிறு |
+ |
மை |
= |
சிறுமை |
|
பெறு |
+ |
மை |
= |
பெறுமை |
|
வினை |
+ |
மதி |
= |
பெயர் |
|
ஏற்று |
+ |
மதி |
= |
ஏற்றுமதி |
|
இறக்கு |
+ |
மதி |
= |
இறக்குமதி |
|
வா |
+ |
மதி |
= |
வருமதி |
|
தா |
+ |
மதி |
= |
தருமதி |
| ஆக்கப்பெயர் |
இவ்வாறு வினைச்சொற்களுடன் விகுதிகளை சேர்ப்பதன் மூலம் பல்வேறு ஆக்கப்பெயர்கள் ஆக்கப்படுகின்றன.மேலே குறிப்பிட்டது போல வினை + விகுதி + விகுதி =பெயர் என இரண்டு விகுதிகள் சேர்ந்தும் ஆக்கப்பெயர்கள் ஆக்கப்படுகின்றன. இவ்வாறு இரண்டு விகுதிகள் ஒரு வினைச்சொல்லுடன் சேர்ந்து ஆக்கப்படும் சில ஆக்கப்பெயர்களுக்கு உதாரணமாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். முயற்சியாளன், பார்வையாளன், படைப்பாளி
முயல் + சி + ஆளன் = முயற்சியாளன்
பார் +வை+ ஆளன் = பார்வையாளன்
படை +ப்பு+ ஆளன் = படைப்பாளன்
ஆக்கப்பெயர் என்னறால் என்ன? ஆக்கப்பெயர்களுக்கு உதாரணங்கள்
என்பன தொடர்பான தெளிவான ஒரு பதிவாக இது அமையும் என நம்புகின்றேன். இவ்வாறான தமிழ்
இலக்கணம் தொடர்பான பதிவுகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றையும்
பார்வையிடவும்.