கூட்டுப்பெயர் என்றால் என்ன
பெயர்ச்சொற்களின் வகைகளாக நாம் மாற்றுப்பெயர்,
ஆக்கப்பெயர், கூட்டுப்பெயர், தொழிற்பெயர், வினையாலனையும்பெயர் என வகைப்படுத்தலாம்.
இவற்றுள் நாம் மாற்றுப்பெயர் மற்றும் ஆக்கப்பெயர் தொடர்பான பதிவினை பதிவிட்டுள்ளோம்.
இன்று இந்தப்பதிவில் கூட்டுப்பெயர் என்றால் என்ன என்பது தொடர்பாக அறிந்துக்கொள்வோம்.
கூட்டுப்பெயர் |
கூட்டுப்பெயர் என்றால் என்ன?
கூட்டுப்பெயர் என்பது இரண்டு சொற்கள் அல்லது பல
சொற்களை இணைத்து உருவாக்கப்படும் பெயர்ச்சொல்லாகும். உதாரணமாக மட்டுவண்டி, வானொலி,
புகைவண்டி போன்ற சொற்கள் இரண்டு வெவ்வேறு சொற்களை கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக மாடு + வண்டி = மாட்டுவண்டி
எனவும் வான் + ஒலி = வானொலி எனவும் புகை +
வண்டி = புகைவண்டி எனவும் இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுப்பெயராக
வந்துள்ளது. இங்கு இரண்டு சொற்களும் வெவ்வேறு சொற்களாக காணப்படுகின்ற போதிலும் அவை
இரண்டும் சேர்ந்து கூட்டுப்பெயராக மாற்றமடைந்ததும் அவை ஒரு சொல்லாகவே கருதப்படுகின்றது.
தற்காலத்தில் தமிழில் காணப்படும் பெரும்பாலான
கூட்டுப்பெயர்கள் இரண்டு சொற்கள் சேர்ந்ததாகவே காணப்படுகின்றன. கூட்டுப்பெயர்கள்
இரண்டு அல்லது மூன்று சொற்களை கொண்டு ஆக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரு சொல்லாகவே செயற்படுகின்றன.
எடுத்துக்காட்டாக கடற்கரை என்ற கூட்டுப்பெயரானது கடல்
+ கரை என்ற இரண்டு வெவ்வேறு சொற்களால் ஆக்கப்ட்டுள்ளது. கடல் மற்றும் கரை
என்பன தனிப்பெயர்களாகும். அத்தனிப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும், பெயரடைகளை
ஏற்கும், சுட்டு அடைகளை ஏற்கும். உதாரணமாக கடல் என்ற தனிப்பெயரானது கடலில், கடலை,
கடலின், கடலுக்கு போன்ற வேற்றுமை உருபுகளை ஏற்றுள்ளது. அதே போல கரை என்ற பெயர்ச்சொல்
கரையில், கரையின், கரைக்கு, கரையை போன்ற வேற்றுமை உருபுகளை
ஏற்றுள்ளது. இத் தனிப்பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்பது போல பெயரடைகளையும்
ஏற்கும். எடுத்துக்காட்டாக அழகான கடல், அழகிய கரை, பெரிய கடல் போன்ற உதாரணங்களை கூறலாம். இச்சொற்கள் கடல் + கரை = கடற்கரை
என கூட்டுப்பெயராக மாறும். கடற்கரை என்ற கூட்டுப்பெயரானது ஒருசொல்லாக
தனித்து செயற்படுவது போன்று இச்சொற்களின் இறுதியிலேயே வேற்றுமை உருபு வரும் உதாரணமாக
கடற்கரையில், கடற்கரையின், கடற்கரைக்கு, கடற்கரையை.
கூட்டுப்பெயர்களின் இறுதியில் வேற்றுமை உருபு
வருவது போல பெயரடை, சுட்டு என்பன சொல்லின் முன்பு வரும். அழகான கடற்கரை, இந்த கடற்கரை
போன்ற உதாரணங்களை கூறலாம்.
கூட்டுப்பெயரின் பண்புகள்.
· கூட்டுப்பெயர்கள்
வேற்றுமையை இரண்டாவது சொல்லின் இறுதியிலேயே ஏற்கும்.
· இவை
பெயரடைகளை ஏற்கும்.
· பெயரடைகள்
முதலாவது சொல்லின் முதலில் மட்டுமே வரும்.
· இவை
சுட்டு அடைகளையும் ஏற்கும். இவையும் முதலாவது சொல்லின் முதலில் மட்டுமே வரும்.
· கூட்டுப்பெயர்களின்
இரண்டு சொற்களுக்கு இடையில் வேறு ஒரு சொல்லோ, உருபோ, விகுதியோ வராது.
கூட்டுப்பெயரின் அமைப்பு
கூட்டுப்பெயர்கள் பொதுவாக இரண்டு வகையில் அமைக்கப்படுகின்றன.
ஒன்று ஒரு பெயர்ச்சொல்லுடன் பிறிதொரு பெயர்ச்சொல்லை
இணைத்து அமைக்கப்படுகின்றன. பெயர் + பெயர் =
கூட்டுப்பெயர் மற்றொன்று ஒரு வினைச்சொல்லுடன் ஒரு பெயர்ச்சொல்லை இணைத்து
அமைக்கப்படுகின்றன. வினை + பெயர் = கூட்டுப்பெயர்.
ஒரு பெயர்ச்சொல்லுடன் மற்றொருபெயர்ச்சொல் சேர்ந்து
கூட்டுப்பெயர் உருவாகும் முறையினை அறிவோம்.
கூட்டுப்பெயர் |
பெயர் |
+ |
பெயர் |
= |
கூட்டுப்பெயர் |
நீர் |
+ |
ஏரி |
=
|
நீரேரி |
புகை |
+ |
வண்டி |
= |
புகைவண்டி |
விமானம் |
+ |
நிலையம் |
= |
விமானநிலையம் |
மாடு |
+ |
வண்டி |
= |
மாட்டுவண்டி |
வான் |
+ |
ஒலி |
= |
வானொலி |
உல்லாசம் |
+ |
பயணம் |
= |
உல்லாசப்பயணம் |
நீர்
|
+ |
வீழ்ச்சி |
= |
நீர்வீழ்ச்சி |
பல்கலை |
+ |
கழகம் |
= |
பல்கலைக்கழகம் |
மின் |
+ |
சாரம் |
= |
மின்சாரம் |
நீதி |
+ |
மன்றம் |
= |
நீதிமன்றம் |
குளிர் |
+ |
காற்று |
= |
குளிர்காற்று |
கடல் |
+ |
கரை |
=
|
கடற்கரை |
நீர் |
+ |
தாங்கி |
=
|
நீர்த்தாங்கி |
பாடம் |
+ |
சாலை |
=
|
பாடசாலை |
யானை |
+ |
பாகன் |
=
|
யானைப்பாகன் |
பள்ளி |
+ |
கூடம் |
=
|
பள்ளிக்கூடம் |
நீர் |
+ |
ஓடை |
=
|
நீரோடை |
நீர் |
+ |
குடம் |
= |
நீர்க்குடம் |
கடல் |
+ |
அலை |
=
|
கடலலை |
கடல் |
+ |
நீர் |
= |
கடல்நீர் |
மின் |
+ |
அஞ்சல் |
= |
மின்னஞ்சல் |
திறன் |
+ |
ஆய்வு |
= |
திறனாய்வு |
கல்வி |
+ |
ஆண்டு |
= |
கல்வியாண்டு |
வீதி |
+ |
நாடகம் |
= |
வீதிநாடகம் |
ஒரு வினைச்சொல்லுடன் ஒரு பெயர்ச்சொல் சேர்ந்து
கூட்டுப்பெயர் உருவாகும் முறையினை அறிவோம்.
கூட்டுப்பெயர் |
பெயர் |
+ |
பெயர் |
= |
கூட்டுப்பெயர் |
இடி |
+ |
தாங்கி |
=
|
இடிதாங்கி |
கட்டு |
+ |
உரை |
= |
கட்டுரை |
தொலை |
+ |
காட்சி |
= |
தொலைக்காட்சி |
ஏவு |
+ |
கனை |
= |
ஏவுகனை |
கூட்டு |
+ |
உறவு |
= |
கூட்டுறவு |
எறி |
+ |
கயிறு |
= |
எறிகயிறு |
பறி |
+ |
முதல் |
= |
பறிமுதல் |
சுடு |
+ |
காடு |
= |
சுடுகாடு |
சுடு |
+ |
சோறு |
= |
சுடுசோறு |
எழுது |
+ |
கோல் |
= |
எழுதுகோல் |
சுடு |
+ |
நீர் |
=
|
சுடுநீர் |
இவ்வாறு கூட்டுப்பெயர்கள் ஆக்கப்டுகின்றன. எனவே
இந்தப்பதிவில் நாம் கூட்டுப்பெயர் என்றால் என்ன? கூட்டுப்பெயர்களின் பண்புகள்,
கூட்டுப்பெயரின் வகைகளும் அவற்றின் அமைப்பும், கூட்டுப்பெயர்களுக்கான உதாரணங்கள்
என்பன தொடர்பாக அறிந்துக்கொள்ள முடியும்.