மாற்றுப்பெயர் என்றால் என்ன?

மாற்றுப்பெயர்

பல எழுத்துக்கள் அல்லது ஒரு எழுத்து சேர்ந்து பொருள் தருமாறு அமையுமாயின் அதனை சொல் அல்லது பதம் என அழைப்போம். சொற்களை நாம் பிரதானமாக பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படுத்தலாம். இவற்றில் பெயர்ச்சொல் என்பது ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். இவை பொருட்பெயர், இடப்பெயர், குணப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், தொழிற்பெயர் என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சொற்களை அவற்றின் அமைப்பு மற்றும் இலக்கண தொழிற்பாடுகளுக்கமைய மேலும் பல வகைகளாக வேறுபடுத்தலாம்.

மாற்றுப்பெயர்
மாற்றுப்பெயர்


பெயர்ச்சொற்களை மாற்றுப்பெயர், ஆக்கப்பெயர், கூட்டுப்பெயர், தொழிற்பெயர், வினையாலனையும் பெயர் என வகைப்படுத்தலாம். இவற்றில் இந்தப் பதிவில் மாற்றுப்பெயர் தொடர்பான விளக்கத்தினை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

மாற்றுப்பெயர் என்றால் என்ன?

மாற்றுப்பெயர் என்பது யாதெனில் ஒரு பெயர்ச்சொல்லுக்கு பதிலாக அல்லது மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய சொல் மாற்றுப்பெயர் ஆகும். உதாரணமாக நாம் கீழ் வரும் சிறிய பந்தியினை அவதானிப்போம்.

குமார் பாரதி தமிழ் பாடசாலையில் கல்வி கற்கின்றான். குமார் தரம் 10 இல் கல்வி கற்கும் ஒரு மாணவன் ஆவான். குமார் மிகவும் நன்றாக படிக்கக்கூடிய மாணவனாவான். குமாருக்கு தமிழ் பாடம் என்றால் மிகவும் விருப்பம். குமார் பாடசாலைக்கு தினமும் செல்வான்.

குமார் பாரதி தமிழ் பாடசாலையில் கல்வி கற்கின்றான். இவன் தரம் 10 இல் கல்வி கற்கும் ஒரு மாணவன் ஆவான். இவன் மிகவும் நன்றாக படிக்கக்கூடிய மாணவனாவான். இவனுக்கு தமிழ் பாடம் என்றால் மிகவும் விருப்பம். இவன் பாடசாலைக்கு தினமும் செல்வான்.

மேலே தரப்பட்டுள்ள இரண்டு பந்திகளிலும் குமார் என்ற மாணவனை பற்றி கூறப்பட்டுள்ளது. முதலாவது பந்தியல் காணப்படும் அனைத்து வாக்கியங்களிலும் குமார், குமாருக்கு என வந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஒருத்தருடைய பெயரினை கூறுவதற்கு பொருத்தமாக இருக்காது. எனவே இதற்கு பதிலாக இரண்டாவது பந்தியில் இவன், இவனுக்கு என்ற மாற்றுப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே குமார் என்ற பெயர்ச்சொல்லுக்கு மாற்றீடாக இவன், இவனுக்கு என்ற மாற்றுப்பெயர்கள் வந்துள்ளன. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லுக்கு பதிலாக ஒரு மாற்றுப்பெயரை பயன்படுத்த முடியும்.

 

மாற்றுப் பெயர்களின் வகைகள் எவை?

மாற்றுப்பெயர்களின் வகைகளாக நாம் மூவிடப்பெயர், எண்ணுப்பெயர், சுட்டுப்பெயர், வினாப்பெயர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மாற்றுப்பெயர்
மாற்றுப்பெயர்


01 மூவிடப்பெயர்

ஒரு பெயர்ச்சொல்லுக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் சொற்களை மாற்றுப்பெயர் என கூறுவோம். இவற்றை மூவிடங்களின் அடிப்படையில் நாம் வேறுபடுத்த முடியும். இடம் தன்மை, முன்னிலை, படர்கை என மூன்று வகைப்படும். இவ் இடங்களின் அடிப்படையில் மாற்றுப்பெயர்களை பின்வருமாரு வகைப்படுத்தலாம்.

 

தன்மையொருமை

-

நான், யான்

தன்மைப்பன்மை

-

நாம், நாங்கள்

முன்னிலையொருமை

-

நீ

முன்னிலைப்பன்மை

-

நீங்கள், நீர், நீவீர்

படர்கையொருமை

-

அவன், இவள், அவள், இவன்

படர்கைப்பன்மை

-

இவர்கள், அவர்கள், அவை, இவை

 

தன்மையொருமை

“எனது பெயர் குமார். நான் தரம் 5 இல் கல்வி கற்கின்றேன். நான் நன்றாக படிப்பேன்.” இவ்வாக்கியத்தில் குமார் என்ற பெயர்ச்சொல்லுக்கு மாற்றீடாக நான் எனும் தன்மையொருமை மாற்றுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தன்மைப்பன்மை

“நானும் எனது தம்பியும் தினமும் பாடசாலைக்கு செல்வோம். நாங்கள் பாடசாலை முடிந்த பிறகு மேலதிக வகுப்பிற்கு செல்வோம். பிறகு நாங்கள் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு செல்வோம்.” இச்சிறிய பந்தியில் நானும் எனது தம்பியும் என்பதற்கு மாற்றீடாக நாங்கள் எனும் தன்மைப்பன்மை மாற்றுப்பெயர் வந்துள்ளது.

 

முன்னிலையொருமை

“அடியே கமலா! நீ ஏன் நேற்று பாடசாலைக்கு வரவில்லை?” இங்கு கமலா என்ற பெயர்சசொல்லுக்கு மாற்றீடாக நீ எனும் மாற்றுப்பெயர் வந்துள்ளது.

 

முன்னிலைப்பன்மை

“அடியே கமலி நான் கடைக்கு செல்கிறேன். நீ கடைக்கு வருகிறாயா? அப்படி வந்தாள் உன்னுடைய தம்பியை துணைக்கு அழைத்துக்கொண்டு வா. நீங்கள் இருவரும் வரும்போது குடை ஒன்று கொண்டு வாருங்கள்.” இங்கு கமலி மறும் அவளின் தம்பி, ஆகிய இருவரையும் குறிப்பதற்காக நீங்கள் எனும் மாற்றுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

படர்கையொருமை

“வணக்கம் ரமேஸ். குமார் இன்று பாடசாலைக்கு வரவில்லையா? அவன் ஏன் பாடசாலைக்கு வரவில்லை?” இங்கு குமார் என்ற படர்கை பெயர்ச்சொல்லுக்கு பதிலாக அவன் எனும் மாற்றுப்பெயர் வந்துள்ளது.

 

படர்கைப்பன்மை

“காலை வணக்கம் கமல். இன்று குமாரும், விமலனும் பாடசாலைக்கு வரவில்லையா? அவர்கள் உனது வீட்டின் அருகில் தானே வசிக்கிறார்கள். ஏன் அடிக்கடி பாடசாலைக்கு வருகை தராமல் இருக்கின்றார்கள். நீ அவர்களை கண்டால் நாளை பாடசாலைக்கு அழைத்து வா.” இங்கு குமார் மற்றும் விமலன் ஆகிய முன்னிலை படர்கைப் பெயர்ச்சொற்கலுக்கு பதிலாக அவர்கள் எனும் மாற்றுப்பெயர் வந்துள்ளது.

 

02. எண்ணுப்பெயர்கள்

என்னுப்பெயர்களுக்கான சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஒன்று, சிலர், சில, சிலவற்றை, பல, பலவற்றை, இரண்டு, பலர்

·       மாணவர்களில் சிலர் இன்று பாடசாலைக்கு வரவில்லை.

·       நேற்று நடந்த வாகன விபத்தில் பலர் காயமடைந்தனர்.

·       குமார் நேற்று தெரியாத இரண்டு நபர்கள் அவனை கடந்து செல்வதை கண்டான்.

 

03. சுட்டுப்பெயர்கள்

சுட்டுப்பெயர்களுக்கான சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அது, இது, உது, அவை, உவை, இவை

·       பெண்குயின்களால் பறக்க முடியாது. ஆனால் இவை பறவையயினத்தைச் சேர்ந்தவை.

·       அவை கூட்டம் கூட்டமாக வாழும் உயிரினமாகும்.

 

04. வினாப்பெயர்கள்

வினாப்பெயர்களுக்கான சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எவனோ? யாரோ? எவர்களோ? எவ்வளவோ? எதுவோ? என்னவோ? யாராவது? எவனாவது? எவர்களாவது? எவையாவது? எத்தனையாவது?


Post a Comment

Previous Post Next Post