புணர்ச்சி என்றால் என்ன?

சொற்கள் அல்லது சொல்லுருப்புகள் பொருள் தரும் வகையில் ஒன்றோடு ஒன்று புணர்தல் புணர்ச்சி எனப்படும். நாங்கள் மரத்தை வெட்டினோம். என்ற வாக்கியத்தில் நாம்+ கள்= நாங்கள் எனவும், மரம்+அத்து + ஐ = மரத்தை எனவும், வெட்டு + இன் + ஓம் = வெட்டினோம் எனவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாங்கள் மரத்தை வெட்டினோம். என்ற வாக்கியம் உருவாகியுள்ளது. எனவே புணர்ச்சி தொடர்பாக மேலதிக தகவல்களை நாம் பார்ப்போம்.

 

புணர்ச்சி என்றால் என்ன?

புணர்ச்சியின் வகைகள் எவை?

புணர்ச்சியின் வகைகளாக நாம் அகப்புணர்ச்சி, புறப்புணர்ச்சி, இயல்புப் புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி. அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இனி இவை தொடர்பாக நாம் விரிவாக நோக்குவோம்.


01.அகப்புணர்ச்சி 

அகப்புணர்ச்சி என்பது சொல்லின் உருபுகள் இணைந்து உருவாகுவதாகும். உதாரணமாக அவர்கள் பாடசாலைக்கு சென்றார்கள். என்ற வாக்கியத்தில். அவர் + கள்+ பாடம் + சாலை+ செல் + இன் + ற் + ஆர் + கள் என சொல் உருபுகள் இணைந்து சொற்கள் உருவாகியுள்ளன. எனவே இவற்றை அகப்புணர்ச்சி என அழைப்பார்கள். அகப்புணர்ச்சியில் சொல் உருப்புகள் இடைவௌி இன்றி புணர்ச்சி விகாரங்களுடன் எழுதப்படுகின்றன.

 

02. புறப்புணர்ச்சி 

இரண்டு சொற்கள் அல்லது பல சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சொற்றொடராகவோ, வாக்கியமாகவோ வருவது புறப்புணர்ச்சி எனப்படும்.  உதாரணமாக நாம் பின்வரும் சொற்றொடர்களை நோக்குவோம். நாங்கள் மரத்தை நட்டோம், அவர்கள் கடைக்குச் சென்றார்கள், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றார்கள் போன்றவை புறப்புணர்ச்சியாகும். புறப்புணர்ச்சியில் சொற்கள் இடைவௌிவிட்டு பெரும்பாலும் புணர்ச்சி விகாரங்கள் இன்றி பிரித்து எழுதப்படுகின்றன.

 

புணர்ச்சி என்றால் என்ன?

03.இயல்புப் புணர்ச்சி

இரு சொற்கள் புணரும் பொழுது நிலை மொழியின் ஈற்றிலோ அல்லது வருமொழியின் முதலிலோ எவ்வித மாற்றங்களும் ஏற்படாமல் புணர்தல் இயல்பு புணர்ச்சி எனப்படும். உதாரணமாக மண் + வெட்டி இதனை நாம் சேர்த்து எழுதும் பொழுது மண்வெட்டி என எழுதுவோம். இங்கு மண் என்பது முதல் மொழி எனவும் வெட்டி என்பது வருமொழி எனவும் அழைக்கப்படும். எனவே முதல் மொழியான மண் என்ற சொல்லின் இறுதியிலும் வருமொழியான வெட்டி என்ற சொல்லின் முதலிலும் எவ்வித மாற்றங்களும் நடைபெறாமல் இயல்பாக இரு சொற்களும் புணர்கின்றன. ஆகவே இதனை இயல்பு புணர்ச்சி என்பர்.

இயல்பு புணர்ச்சிக்கு மேலும் சில உதாரணங்களை நாம் கீழே பார்ப்போம்

மண்

+

வெட்டி

=

மண்வெட்டி

மணல்

+

வீடு

=

மணல்வீடு

வாழை

+

மரம்

=

வாழைமரம்

மாடி

+

வீடு

=

மாடிவீடு

புகை

+

வண்டி

=

புகைவண்டி

பூ

+

மாலை

=

பூமாலை

குதிரை

+

வண்டி

=

குதிரைவண்டி

கண்

+

காட்சி

=

கண்காட்சி

பொன்

+

வண்டு

=

பொன்வண்டு

கலை

+

விழா

=

கலைவிழா

தமிழினி

+

வந்தாள்

=

தமிழினி வந்தாள்

கடல்

+

அலை

=

கடலலை

தொடர்

+

ஊர்ந்து

=

தொடரூந்து

தேன்

+

அருவி

=

தேனருவி

 

தொடரூந்து, தேனருவி, கடலலை இவ் உதாரணங்களில் நிலை மொழியிலும் வருமொழியிலும் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் புணர்ந்துள்ளன இதனை இயல்பு புணர்ச்சி என்பர்.  இவைகளும் இயல்பு புணர்ச்சிகளே ஏனெனில் நிலை மொழியின் இறுதி மெய்யும் வருமொழியின் முதல் உயிரும் இணைந்து உயிர்மெய் என்கின்ற வரி வடிவம் பெற்றுள்ளதெ தவிர நிலைமொழி வருமொழிகளில் உள்ள எழுத்துக்கள் எதுவும் கெடவோ, தோன்றுவோ, தெரியவோ இல்லை.

 

03. விகாரப் புணர்ச்சி

சொற்களோ சொல் உறுப்புகளோ புணரும் பொழுது நிலை மொழியின் ஈற்றிலும் வருமொழியின் முதலிலும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது விகாரப் புணர்ச்சி என அழைக்கப்படும். நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் இவை திரிதல், தோன்றல், கெடுதல் என மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. இனி இவை தொடர்பாக விரிவாக நோக்குவோம்.

 

தோன்றல்

நிலைமொழியும் வருமொழியும் புணரும் பொழுது ஏதாவது ஒரு புதிய எழுத்து தோன்றுமாயின் அது  தோன்றல் விகாரம் என அழைக்கப்படும். பழம் + கள் = பழங்கள் இங்கு ங் எனும் ஒரு எழுத்து தோன்றியுள்ளது. எனவே இது தோன்றல் ஆகும். மேலும் சில உதாரணங்களை பார்ப்போம்.

வௌி + களம் = வௌிக்களம்

பழம் + கள் = பழங்கள்

அறிவு + துறை = அறிவுத்துறை

கற்பனை + திறன் = கற்பனைத்திறன்

கற்பனை + சுவை = கற்பனைச்சுவை

நீர் + குமிழி = நீர்க்குமிழி

மா + பழம் = மாம்பழம்

மா + கனி = மாங்கனி

விழா + பழம் = விழாம்பழம்

அறிவு + துறை = அறிவுத்துறை

 

திரிதல்

நிலைமொழியும் வருமொழியும் புணரும் பொழுது முதல் மொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ வரும் எழுத்து திரிபடையுமாயின் அது திரிதல் விகாரம் ஆகும். பால் + சோறு = பாற்சோறு இங்கு ல் எனும் எழுத்து ற் என திரிபடைந்துள்ளது. மேலும் சில உதாரணங்களை பார்ப்போம்.

கல் + வீடு = கற்வீடு

முள் + செடி = முட்செடி

மண் + பானை = மற்பானை

முருங்கை + இலை = முருங்கையிலை

பொன் + காசு = பொற்காசு

கல் + சிலை = கற்சிலை

வாள் + படை = வாட்படை

தேர் + ஓட்டி = தேரோட்டி

கோயில் + புறா = கோயிற்புறா

கடல் + புறம் = கடற்புறம்

 

புணர்ச்சி என்றால் என்ன?

கெடுதல்

நிலைமொழியும் வருமொழியும் புணரும் பொழுது ஏதாவது ஒரு எழுத்து இல்லாமல் போதல் கெடுதல் விகாரம் எனப்படும். மரம் + வேர் = மரவேர். இங்கு மரம் என்ற முதல் மொழியில் ம் எனும் இறுதி எழுத்து இல்லாமல் போய்விட்டது. எனவே இவ்வாறு எழுத்து இல்லாமல் போதல் கெடுதல் விகாரமாகும். மேலும் சில உதாரணங்களை பார்ப்போம்.

சிறகு + ஆல் = சிறகால்

மனம் + வேதனை = மனவேதனை

நீலம் + வானம் = நீலவானம்

தெய்வம் + வழிப்பாடு = தெய்வவழிப்பாடு

மரம் + வேர் = மரவேர்

மரம் + வேலி = மரவேலி

நாக்கு + ஐ = நாக்கை

கதவு + ஆல் = கதவால்

இறுமு = அல் = இறுமல்

மனம் + வேதனை = மனவேதனை

 

04. வேற்றுமைப் புணர்ச்சி

எழுவாய் வேற்றுமையும் விளிவேற்றுமையும் தவிர ஏனைய வேற்றுமை உருபுகளான ஐ, கு, ஆல், இன், கண், அது என்பன வௌிப்படையாகவோ, மறைந்தோ வர சொற்கள் புணர்வது வேற்றுமைப்புணர்ச்சி எனப்படும்.  

என் + ஐ = என்னை

நம் + ஐ = நம்மை

எங்கள் + ஐ = எங்களை

உன் + ஐ = உன்னை

உங்கள் + ஐ = உங்களை

காட்ட் + ஐ = காட்டை

வீட்ட் + உக்கு = வீட்டுக்கு

ஆட்ட் + ஆல் = ஆட்டால்

மாட்ட் + ஐ = மாட்டை

ஆறு + ஐ = ஆறை

ஆறு + உடன் = ஆறுடன்

ஆறு + உக்கு = ஆறுக்கு

தம்பி + கு = தம்பிக்கு

கமல் + ஆல் = கமலால்

அதிபர் + கு = அதிபருக்கு

 

புணர்ச்சி என்றால் என்ன?

05. அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி தவிர்ந்த ஏனைய எல்லா வகைப் புணர்ச்சிகளும் அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

 

இந்த பதிவில் புணர்ச்சி என்றால் என்ன? புணர்ச்சியின் வகைகள், அகப்புணர்ச்சி, புறப்புணர்ச்சி, இயல்புப்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என்பன தொடர்பாக விளக்கமாக கற்றுள்ளோம்.

 

 

 

Post a Comment

Previous Post Next Post