தரம் 3 மாணவர்களுக்கான காலங்கள் தொடர்பான விளக்கங்களும் அவை தொடர்பான பயிற்சிகளும், இணையவழி பயிற்சிகளும் இப்பதிவில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பதிவானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன் மிக்கதாக அமையும். ஆசிரியர்கள் காலங்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பயிற்சி அட்டைகளை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க முடியும். இது போன்ற பல பதிவுகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது அவற்றினை பார்வையிடவும்.
தரம் 3 காலங்கள் தொடர்பான விளக்கங்கள்.
1.இறந்தகாலம்
நடந்து முடிந்த ஒரு செயலை குறிப்பது இறந்தகாலமாகும்.
உதாரணங்கள்.
- குமார் கடைக்கு சென்றான்.
- மாமா நேற்று வந்தார்.
- நான் பாடல் பாடினேன்.
- தம்பி சித்திரம் வரைந்தான்.
- கமலா புத்தகம் வாசித்தாள்.
மேலே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ள சொற்கள் ஒரு செயல் நடந்து முடிந்ததை உணர்த்துகின்றன. எனவே இவை இறந்தகாலமாகும்.
2.நிகழ்காலம்
இன்று நடக்கின்ற ஒரு செயலை குறிப்பது நிகழ்காலமாகும்.
உதாரணங்கள்.
- குமார் கடைக்கு செல்கிறான்.
- மாமா இன்று வருகிறார்.
- நான் பாடல் பாடுகிறேன்.
- தம்பி சித்திரம் வரைகின்றான்.
- கமலா புத்தகம் வாசிக்கின்றாள்.
மேலே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ள சொற்கள் ஒரு செயல் நடந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. எனவே இவை நிகழ்காலமாகும்.
3.எதிர்காலம்
நடக்கப் போகும் ஒரு செயலை குறிப்பது எதிர்காலமாகும்.
உதாரணங்கள்.
- குமார் கடைக்கு செல்வான்.
- மாமா நாளை வருவார்.
- நான் பாடல் பாடுவேன்.
- தம்பி சித்திரம் வரைவான்.
- கமலா புத்தகம் வாசிப்பாள்.
மேலே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ள சொற்கள் ஒரு செயல் நடக்கப் போவதை உணர்த்துகின்றன. எனவே இவை இறந்தகாலமாகும்.
காலங்கள் தரம் 3 PDF
தரம் 3 மாணவர்களுக்கு காலங்கள் தொடர்பான PDF கீழே தரப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
காலங்கள் தரம் 3 பயிற்சிகள்
தரம் 3 மாணவர்களுக்கான காலங்கள் தொடர்பான பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன அவற்றினை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குங்கள்.
தரம் 3 காலங்கள் இணையவழி பயிற்சிகள்.
காலங்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகளை செய்வதற்கு கீழே காணப்படும் படத்தினை தொடவும். தரம் 3 மாணவர்களுக்காக இவ் இணையவழி பயிற்சியானது தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களு இவற்றை சுயமாக செய்துபார்க்க முடியும். இணையவழி பயிற்சிகளை செய்வதில் மேலதிக விளக்கம் தேவையெனின் வழங்கப்பட்டுள்ள வீடியோ காணொளிகளை பார்வையிட முடியும்.