தரம் 3 காலங்கள் இணையவழி பயிற்சி.

 தரம் 3 மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. காலங்கள் தொடர்பான பயிற்சிகளே கீழே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக அப்பயிற்சிகளை செய்து பார்க்க முடியும். மாணவர்களால் இலகுவாக செய்யக்கூடிய வகையில் இவ் ​இணையவழி பயிற்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர்கள் இதனை வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது பயன்படுத்த முடியும். மேலும் இது போன்ற இணையவழி பயிற்சிகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றினை பயன்படுத்ததிக் கொள்ள முடியும். 

தரம் 3 காலங்கள் இணையவழி பயிற்சி.
தரம் 3 காலங்கள் இணையவழி பயிற்சி.


தரம் 3 காலங்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் பயிற்சி அட்டைகள் என்பன தொடர்பான முழு விளக்கமும் காலங்கள் தரம் 3 என்ற பதிவிற்கு சென்று நீங்கள் பார்வையிட முடியும்.   


தரம் 3 காலங்கள் இணையவழி பயிற்சிகள்.

காலங்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன அவற்றினை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கத்தினை கீழே தரப்பட்டுள்ள வீடியோகாணொளியில் பார்வையிட முடியும். மாணவர்கள் சுயமாக இப்பயிற்சிகளை செய்யும் போது ஆசிரியர்கள் அல்லது பெற்றோரின் உதவியினை பெற்றுக்கொள்ளவும்.

பயிற்சி 1

கீழே தரப்பட்டுள்ள சொற்கள் எந்த காலத்தை உணர்த்துகின்றது என்பதனை தெரிவு செய்யவும். சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் submit என்ற பொத்தானை அழுத்தவும்.

சரியான விடையினை தெரிவு செய்யவும்.


செல்வேன்

வரைந்தேன்

விளையாடுவான்

வீசியது

வரைகிறான்

வாசித்தாள்

பறித்தாள்

செல்கிறான்

பெய்யும்

பாடுகின்றான்



பயிற்சி 2

கீழே 10 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன. அவ் வாக்கியங்கள் உணர்த்தும் காலங்களை இனங்கண்டு சரியான காலத்தை தரப்பட்டுள்ள 3 விடைகளில் இருந்து தெரிவு செய்யவும். தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும். இணையவழி பயிற்சியினை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் மேலே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியிளை பார்வையிடவும்.

சரியான விடையினை தெரிவு செய்க.

1.மாமா நாளை வீட்டிற்கு வருவார்.






2.நாளை மழை பெய்யும்.






3.நான் நேற்று கடைக்கு சென்றேன்.






4.ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார்.






5.நான் பூங்காவிற்கு செல்வேன்.






6.தம்பி சித்திரம் வரைகிறான்.






7.அக்கா பாடல் பாடினாள்.






8.அப்பா மீன் பிடிக்க செல்வார்.






9.மாமா கடைக்கு செல்கிறார்.






10.அவள் பூக்கள் பறித்தாள்.








Post a Comment

Previous Post Next Post