செய்வினை செயப்பாட்டு வினை
ஒரு செயலை உணர்த்துதல், காலங்காட்டுதல், வேற்றுமை உருபை ஏற்காமை ஆகிய
பண்புகளுடன் வருஞ்சொல் வினைச்சொல் ஆகும். அந்த வகையில் வினைச்சொற்களினை நாம்
பலவாறு பிரித்து நோக்கலாம். எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே உள்ள உறவின்
அடிப்படையில் வினைச் சொற்களை செய்வினை செயப்பாட்டுவினை என வகைப்படுத்தலாம். எனவே
இந்தப்பதிவின் மூலம் செய்வினை மற்றும்
செயப்பாட்டுவினை என்றால் என்ன என்பது தொடர்பான விளக்கத்தினை பெற்றுக்கொள்ள
முடியும்.
செய்வினை செயப்பாட்டுவினை |
செய்வினை என்றால் என்ன?
ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்றன காணப்படும். இங்கு
எழுவாயை கருத்தாவாக கொள்ளும் வினை பொதுவாக செய்வினை எனலாம். அதாவது பின்வரும்
உதாரணத்தை நோக்குவோம்.
“தம்பி
கதவை மூடினான்.” என்ற
வாக்கியத்தில் எழுவாயான தம்பியை கருத்தாவாக இவ்வாக்கியம் கொண்டுள்ளது. மூடினான்
என்ற செயலை செய்தவன் தம்பி இங்கு தம்பி எழுவாயாக வந்துள்ளது. எனவே எழுவாயை
கருத்தாவாக கொள்ளும் வினை செய்வினை ஆகும்.
செய்வினைக்கு சில உதாரணங்கள்
குழந்தை பால்
குடித்தது.
தம்பி கதவை
மூடினான்.
யானை
பாகனை கொன்றது.
நான்
புத்தகம் வாசித்தேன்.
தம்பி
கடைக்கு சென்றான்.
உழவன் வயலை
உழுதான்.
பாரதி புத்தகம்
எழுதினான்.
நான்
பாடம் படித்தேன்.
மலர்ச்செல்வி நடனம் ஆடினாள்.
தாய்
தாலாட்டு பாடினாள்.
தேவி உணவு
சமைத்தாள்.
செய்வினை செயப்பாட்டுவினை |
செயப்பாட்டு என்றால் என்ன?
ஒரு வாக்கியத்தில் செயற்படுபொருளை எழுவாயாக கொள்ளும் வினை செயப்பாட்டு வினை எனப்படும். அதாவது பின்வரும் உதாரணத்தை நோக்குவோம்.
“தம்பி
கதவை மூடினான்.” என்ற வாக்கியம் செய்வினை வாக்கியமாகும். இவ் வாக்கித்தில்
வரும் செயப்படுபொருளான கதவு எழுவாயாக வரும் போது இவ்வாக்கியம் “கதவு
தம்பியால் மூடப்பட்டது.” என செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றமடைகின்றது.
செயப்பாட்டு வினைக்கு சில உதாரணங்கள்
பால் குழந்தையால் குடிக்கப்பட்டது.
கதவு தம்பியால் மூடப்பட்டது.
பாகன் யானையால் கொல்லப்பட்டான்.
புத்தகம் என்னால் வாசிக்கப்பட்டது.
வயல் உழவனால் உழப்பட்டது.
புத்தகம் பாரதியால் எழுதப்பட்டது.
பாடம் என்னால் படிக்கப்பட்டது.
நடனம் மலர்ச்செல்வியால் ஆடப்பட்டது.
தாலாட்டு தாயால் பாடப்பட்டது.
உணவு தேவியால் சமைக்கப்பட்து.
ஜனாதிபதியால் அமைச்சரவை கலைக்கப்பட்டது.
நீதிபதியாரால் நிரபராதி விடுதலை செய்யப்பட்டார்.
எனவே இவ்வாறு செயப்பாட்டு வினை உருவாகுகின்றது. இந்தப்பதிவில் செய்வினை செயப்பாட்டு
வினை தொடர்பான முழுமையான விளக்கம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும்.