ஒன்றின் பெயரை குறித்து வரும் சொற்கள் பெயர்ச்சொற்கள் எனப்படும். இவை பொருள், இடம், காலம், சினை, தொழில், குணம் போன்றவற்றின் பெயர்களை குறிக்கும். பெயர்ச்சொற்களின் பண்புகளாக நாம் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
பெயர்ச்சொற்களின் பண்புகள்.
பெயர்ச்சொற்கள் பெரும்பாலும்
வேற்றுமை உருபுகளை ஏற்கும். உதாரணமாக “குமாரை
ஆசிரியர் அடித்தார்.” இவ் வாக்கியத்தில் குமார் என்பது பெயர்ச் சொல் ஆகும்.
குமார் என்ற பெயர்ச் சொல்லுடன் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து குமாரை எனும் பெயர்ச்சொல் உருவாகுகிறது. எனவே
பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும். மேலும் இவை உயர்திணையாகவும், அஃறினணயாகவும்
வரும். எடுத்துக்காட்டாக மேலே கூறப்பட்டுள்ள வாக்கியத்தில் குமாரை எனும் பெயர்ச்
சொல் உயர்திணையாகும்.இச் சொற்கள் இடம் மற்றும் ஐவகை பால்களையும் வௌிப்படுத்தும்.
அந்த வகையில் பின்வரும் வாக்கியத்தை நோக்குவோம். “ராமுவிற்கு
குமார் உதவி செய்தான்” இவ்வாக்கியத்தில் வந்துள்ள பெயர்ச்சொல் ராமு ஆகும். இது ஆண்பால், மற்றும் படர்கை இடத்தினை
வௌிப்படுத்துகின்றது.
பெயர்ச் சொற்களின் வகைகள் எவை?
பெயர்ச்சொற்கள் பிரதானமாக ஆறு
வகைப்படும். அவை அறுவகை பெயர்ச்சொற்கள் எனவும் அழைக்கப்படும். அவை கீழே
தரப்பட்டுள்ளன.
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. குணப்பெயர்
6. தொழிற்பெயர்
பொருட்பெயர்
பொருளொன்றின்
பெயரை குறிக்கும் சொற்கள் பொருட்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டுக்கள்.
மக்கள், மாடு,
பேனை, மேசை, கதிரை, போத்தல், கத்தி, கடிகாரம், கணினி, புத்தகம்
இடப்பெயர்
இடமொன்றின்
பெயரை குறிக்கும் சொற்கள் இடப்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டுக்கள்.
பாடசாலை,
வைத்தியசாலை, நூலகம், பேருந்துதரிப்பிடம், புகையிரத நிலையம், காவல் நிலையம், தபால்
நிலையம், மைதானம், நாடு, ஆகாயம், நிலம்
காலப்பெயர்
காலமொன்றின்
பெயரை குறிக்கும் சொற்கள் காலப்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டுக்கள்.
ஆண்டு, 7 வார
நாட்கள், 12 மாதங்கள், மாரி, கோடை, குளிர்காலம், ஊழி
சினைப்பெயர்
முழுமையான ஒன்றின்
பகுதியை குறித்து நிற்கும் சொற்கள் சினைப்பெயர் ஆகும்.
எடுத்துக்காட்டுக்கள்.
கை, கால், வாய்,
கொம்பு, பூ , பூவிதல், வேர், தண்டு, இலை
குணப்பெயர்
வடிவம்,
நிறங்கள், குணம் முதலானவற்றை குறித்து நிற்பது குணப்பெயர் ஆகும்.
எடுத்துக்காட்டுக்கள்.
செம்மை, அறிவு,
அச்சம், அழகு
தொழிற்பெயர்
தொழில் ஒன்றை
குறித்து நிற்பது தொழிற்பெயர் ஆகும்.
எடுத்துக்காட்டுக்கள்.
பாடுதல்,
ஆடுதல், விளையாடுதல், படித்தல், உழுதல்
எனவே பெயர்ச் சொற்களை
மேலே குறிப்பிட்டவாறு ஆறாக வகைப்படுத்தலாம்.
இடுக்குறிப் பெயர்
என்றால் என்ன?
இடுக்குறிப் பெயர்
என்பது காலங் காலமாக காரணம் ஏதுமின்றி இடுக்குறியாக வழங்கப்படும் சொற்களாகும். எக்காரணமும்
பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் சொற்றகள் இவையாகும். இவ் இடுக்குறிப் பெயர்களை
இரண்டு வகைப்படுத்துவார்கள். அவை இடுக்குறிப் பொதுப் பெயர் மற்றும் இடுக்குறிச் சிறப்புப்
பெயர் என்பனவாகும்.
இடுக்குறிப் பொதுப்
பெயர் என்றால் என்ன?
இடுக்குறிப் பொதுப்
பெயர் என்பது பொதுவாக ஒன்றினை கூறுவதாகும். எடுத்துக்காட்டாக நாம் சூழலில்
காணப்படும் ஏதாவது ஒரு மரத்தை பொதுவாக மரம் என்று கூறுவோம். அது என்ன மரம் என்று
கூற மாட்டோம். அவ்வாறே மலை, கல், மண், பூ என்பன பொதுப் பெயர்களாகும். இவற்றை
குறிப்பிட்டு கூறுவோமானால் இவை இடுக்குறிச் சிறப்புப் பெயராக மாறும்.
இடுக்குறிச் சிறப்புப்
பெயர் என்றால் என்ன?
இடுக்குறிச் சிறப்புப்
பெயர் என்பது யாதெனில் ஒன்றினை குறிப்பிட்டு கூறுவதாகும். உதாரணமாக மரம் என்று நாம்
பொதுவாக கூறுவதற்கு பதிலாக நாம் அம்மரத்தை மாமரம், பலா மரம், தென்னை மரம் என்று அதன்
பெயரை குறிப்பிட்டு கூறுவோம். அவ்வாறு ஒன்றின் பெயரை குறிப்பிட்டு கூறுவது
இடுக்குறிச் சிறப்புப் பெயர் எனலாம்.
உதாரணமாக மணல்
மண், களிமண், செங்கல், கருங்கல் போன்றன இடுக்குறிச் சிறப்புப் பெயர்களாகும்.
காரணப்பெயர்
என்றால் என்ன?
காரணப்பெயர்
என்பது யதாயினும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்தி நிற்பன காரணப்பொயராகும். உதாரணமாக
பறவைகள் பறப்பதனால் அவற்றை பறவைகள் என்போம். காதிலே அணியப்படுவதனால் அதனை காதணி
என்போம். இவ்வாறு காரணப்பெயர்கள் தோற்றம் பெறுகின்றன. இவை பிரதானமாக இரண்டு வகைப்படும்.
காரணப்பொது மற்றும் காரணச்சிறப்பு பெயர் என்பனவாகும்.
எடுத்துக்காட்ட
காரணப்பொதுப் பெயர் = பறவை, வளையல்
காரணச்சிறப்பு பெயர்
= புறா, கிளி, சங்கு
பெயர்ச்சொற்களை
நாம் மேலும் சில வகைகளாக பிரிக்கலாம். இச் சொற்கள் அவற்றின் அமைப்பு, இலக்கண தொழிற்பாடு
போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன.
1. மாற்றுப்பெயர்
2. ஆக்கப்பெயர்
3. கூட்டுப்பெயர்
4. தொழிற்பெயர்
5. வினையாலணையும் பெயர்