​பெயரடை என்றால் என்ன?


பெயரடை என்றால் என்ன என்பதனை அறிந்துக்கொள்வதற்கு முன் நாம் அடைமொழி என்றால் என்ன என்பதனை அறிந்துக்கொள்ளவது கட்டாயமாகும். அடைமொழி என்பது ஒரு வாக்கியத்தில் காணப்படும் பெயர் அல்லது வினைச் சொல்லுக்கு முன் வந்து பெயர் வினைச் சொல்லினை சிறப்பித்துக் கூறுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்லது சொற்றொடர் ஆகும்.

பெயரடை என்றால் என்ன?
பெயரடை என்றால் என்ன?


இது பெயரடைமொழி, வினையடைமொழி (பெயரடை, வினையடை)  என இரண்டு வகைப்படும். உதாரணமாக நாம் பின்வரும் வாக்கியத்தை நோக்குவோம்- “ பெரிய மரம் சரிந்து விழுந்தது.” இவ் வாக்கியத்தில் பெயர்ச்சொல் மரம். வினைச்சொல் விழுந்தது. இங்கு மரம் என்ற பெயர்ச்சொல்லுக்கு பெரிய எனும் பெயரடை வந்துள்ளது. இது மரத்தின் பண்பினை கூறுகின்றது. அதே போல சரிந்து என்பது விழுந்தது எனும் வினைச்சொல்லுக்கான வினையடையாகும். இவ் வினையடையானது மரம் எவ்வாறு விழுந்தது என்பதற்கு விடை தறுவதாக அமைகின்றது. எனவே அடைமொழிகள் பெயர் மற்றும் வினைச்சொற்கள் தொடர்பாக மேலதிக விளக்கம் மற்றும் அவற்றை சிறப்பித்துக் கூறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.


பெயரடை என்றால் என்ன?

பெயர்ச்சொல் ஒன்றின் பண்பை உணர்த்தப் பயன்படும் அடை பெயரடை எனப்படும்.  இந்த புத்தகம், இரண்டு புத்தகம், படித்த புத்தகம், நல்ல புத்தகம் இங்கு புத்தகம் எனும் பெயர்ச் சொல்லை சிறப்பித்துக் கூறுவதற்கு இந்த, இரண்டு, படித்த, நல்ல என்ற அடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த என்பது சுட்டு அடை ஆகும். இரண்டு என்பது புத்தகத்தின் எண்ணிக்கையை குறிக்கின்றது எனவே இது எண்ணு அடை ஆகும். படித்த என்பது பெயரெச்சம் ஆகும். நல்ல என்பது பெயரடை ஆகும். இது புத்தகத்தின் பண்பினை எடுத்துக் காட்டுகின்றது. எனவே இங்கு இந்த, இரண்டு, படித்த, நல்ல போன்றவை புத்தகம் என்ற பெயர்ச்சொல்லுக்கு அடையாக வந்த போதிலும் அவை உண்மையில் பெயரடை அல்ல அவற்றில் நல்ல என்பது மட்டுமே பெயரடையாகும். இது புத்தகத்தின் தன்மையை அதாவது அதனுடைய பண்பினை உணர்த்தி நிற்கின்றது. எனவே பெயர்ச்சொல்லின் பண்பினை உணர்த்தி நிற்கும் அடைகளே பெயரடைகளாகும். 


பெயரடைகளின் விசேட பண்புகள்

பெயரடைகள் சில விசேடமான பண்புகளை கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில முக்கியமான பண்புகளாக நாம் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 

  1. எப்படிப்பட்ட என்ற வினாவிற்கு விடையளிப்பதாக பெயரடைகள் அமையும்.

பின்வரும் உதாரணத்தை நோக்குவோம். இந்த புத்தகம், வாசித்த புத்தகம், நல்ல புத்தகம் இவற்றுள் இந்த, வாசித்த, நல்ல என்பன புத்தகம் என்ற பெயர்ச்சொல்லுக்கு அடையாக வந்திருந்தாலும் அவை உண்மையில் பெயரடை அல்ல அவற்றுள் நல்ல என்ற அடை மட்டுமே பெயரடையாகும். ஏனெனில் எப்படிப்பட்ட புத்தகம் என்ற வினாவிற்கு பொருத்தமாக நாம் நல்ல புத்தகம் என்ற விடையையே கூறுவோம். இந்த புத்தகம், வாசித்த புத்தகம் என கூறமாட்டோம். இவை எப்படிப்பட்ட புத்தகம் என்பதற்கு பொருத்தமான விடையாக அமையாது. (சிறிய புத்தகம், பெரிய புத்தகம், சிறந்த புத்தகம் என்பன பெயரடைகளுக்கு சிறந்த உதாரணங்களாகும்.)

 

  1. பெயரடைகள் மிகை இடைச்சொற்களால் மிகைப்படுத்தக் கூடியவை.

பெயரடைகள் மிகை இடைச்சொற்களை ஏற்று வரும். ஆனால் ஏனைய அடைகள் அவற்றை ஏற்காது. உதாரணமாக பின்வரும் உதாரணங்களை நோக்குவோம். அந்த புத்தகம், படித்த புத்தகம், நல்ல புத்தகம் இங்கு மிகமிக, மிகவும் போன்ற மிகை இடைச்சொற்களை மேலே கூறிய உதாரணங்களுக்கு பயன்படுத்தினால் மிகமிக அந்த புத்தகம், மிகமிக படித்த புத்தகம், என்று கூற முடியாது.


இவை சுட்டு அடை, எண் அடை, பெயரெச்சம் போன்றவற்றோடு வராது. ஆனால் மிகமிக நல்ல புத்தகம், மிகவும் நல்ல புத்தகம் என கூறலாம். எனவே மிகமிக, மிகவும், ஆகவும் என்ற மிகை இடைச்சொற்களை பெயரடைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவது பொருத்தமாக அமையும். இவ் மிகை இடடைச்சொற்களை  பெரிய, சிறிய, நல்ல, சிறந்த, புதிய, மோசமான, கூடாத போன்ற பெயரடைகளுக்கு முன் பயன்படுத்தலாம். 



பெயரடைகளின் வகைகள்

பெயரடைகளை நாம் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் தனிப் பெயரடை, ஆக்கப் பெயரடை என வகைப்படுத்தலாம். 



பெயரடை என்றால் என்ன?
பெயரடை என்றால் என்ன?




தனிப் பெயரடை

சிறு, கரு, புது, நெடு, நல் முதலிய அடிச்சொற்களுடன் இய, அ முதலிய விகுதிகளை இணைத்து ஆக்கப்படும் சிறிய, கரிய, புதிய, நெடிய, நல்ல என்பன தனிப் பெயரடைகளாகும். படித்த, வாசித்த, பழுத்த, சிவந்த, கறுத்த, வாடிய, குறுகிய என்பன பெயரெச்சம் ஆகும். இவை உண்மையில்  பெயரெச்சமாக காணப்பட்டாலும் இவை பெயரடைகளாக பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக  இவன் படித்த மாணவன். இது பழுத்த பழம், வாடிய முகம், குறுகிய பாதை, சிவந்த உதடுகள், கறுத்த பெண் இங்கு வந்துள்ளவை பெயரெச்சமாக இருந்தாலும் இவை பெயரடைகளாகும். காரணம் எப்படிப்பட்ட என்ற வினாவிற்கு பதில் தரக்கூடிய வகையில் இவ் அடைகள் காணப்படுகின்றன. 


பெயரடை என்றால் என்ன?
பெயரடை என்றால் என்ன?



ஆக்கப் பெயரடை

பெயருடன் ஆன மற்றும் உள்ள எனும் விகுதிகள் சேர்த்து ஆக்கப்படும் அடைகளை ஆக்கப்பெயரடை எனலாம். இதனை கூட்டுப் பெயரடை எனவும் கூறுவார்கள்.

 ஆக்கப் பெயர் என்றால் என்ன?


பெயர்

+

ஆன

=

ஆக்கப்பெயரடை

அழகு

+

ஆன

=

அழகான

உயரம்

+

ஆன

=

உயரமான

இனிமை

+

ஆன

=

இனிமையான

பண்பு

+

ஆன

=

பண்பான

பெறுமை

+

ஆன

=

பெறுமையான

கசப்பு

+

ஆன

=

கசப்பான

பெயர்

+

உள்ள

=

ஆக்கப்பெயரடை

அன்பு

+

உள்ள

=

அன்புள்ள

இனிமை

+

உள்ள

=

இனிமையுள்ள

அழகு

+

உள்ள

=

அழகுள்ள

பண்பு

+

உள்ள

=

பண்புள்ள

ஆசை

+

உள்ள

=

ஆசையுள்ள

கருணை

+

உள்ள

=

கருணையுள்ள




பெயரடை என்றால் என்ன?
பெயரடை என்றால் என்ன?



இவ்வாறான பெயரடைகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. நாம் இவற்றை புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கின்றோம். எனவே இந்தப் பதிவில் பெயரடை என்றால் என்ன என்பது தொடர்பான ஒரு முழுமையான மற்றும் தௌிவான விளக்கம் கிடைக்கப்பெற்றிருக்கும் என நம்புகின்றோம்.


Post a Comment

Previous Post Next Post