புத்திசாலி மான்

 புத்திசாலி மான்

புத்திசாலி மான்

ஒரு அடர்ந்த காட்டின் மத்தியில் வலிமையான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்ததுஅந்த சிங்கம் மிகவும் வலிமையாக இருந்ததால் மற்றைய விலங்குகள் அதனை பார்த்து பயந்தனஅந்த சிங்கம் தினமும் காட்டில் வாழும் மற்ற சிறிய பிராணிகளை வேட்டையாடி உண்ணும்.

புத்திசாலி மான்

 ஒருநாள்அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய ஆலமரம் அருகே கூடின. அந்த விலங்குகள் சிங்கத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட்டுவிட விரும்பின. “நாம் ஏதேனும் செய்ய வேண்டும்,” என்று புத்திசாலியான முதிய யானை சொன்னது. “ஆனால் சிங்கத்தை எப்படிப் போராடி நிறுத்த முடியும்?” என்று சிறிய முயல் அச்சமடைந்து கேள்வி கேட்டது.

புத்திசாலி மான்எ

அப்போது புத்திசாலியான ஒரு இளம் மான் கூறியதுஎன்னிடம் ஒரு திட்டம் உள்ளது என்று அது சொன்னது. “ஆனால் நீங்கள் எல்லோரும் எனக்கு உதவ வேண்டும். ஆனால் நாம் சிங்கத்தோடு நேரடியாக போராடாமல் மறைமுகமாக போரிட வேண்டும் என அந்த மான் கூறியது  

புத்திசாலி மான்

அடுத்த நாள் காலை அந்த புத்திசாலி மான் சிங்கத்தின் குகைக்கு முன் சென்றது. “ஓ வலிமையான சிங்க ராஜாவே நான் உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்துள்ளேன். இந்த காட்டில் இன்னொரு சிங்கம் உள்ளது. 

அந்த சிங்கம் இனிமேல் இந்த காட்டிற்கு ராஜாவாக போகிறேன் என்று அனைத்து விலங்குகளிடமும் கூறி வருகின்றது. அது மட்டுமல்லாமல் உங்களிடம் போர் செய்து உங்களை கொல்லப் போகின்றதாம். என அந்த புத்திசாலி மான் சிங்கத்திடம் கூறியது.

அதனை கேட்டு சிங்கம் கடும் கோபத்தில் கர்சித்தது. “அந்த போட்டியாளரை உடனே காட்டுங்கள்!” என்று அவன் கட்டளையிட்டான். மான் அந்த சிங்கத்தை சாமர்த்தியமாக ஒரு ஆழமான கிணற்றின் அருகில் கூட்டிச் சென்றது. பிறகு மான் சொன்னது சிங்க ராஜாவே அந்த மற்றுமொரு சிங்கம் இந்த கிணற்றுக்குள் தான் இருக்கிறது  என்றது. 

சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. அக்கிணற்றில்  சிங்கம்  கிணற்றில் தன்னுடைய பிரதிபிம்பத்தைப் பார்த்தது. கோபத்தில் சிங்கம் போட்டியாளரை எதிரி சிங்கத் தாக்கிக்கொள்வதாக எண்ணி கிணற்றுக்குள் குதித்து. அதனால் சிங்கம் தண்ணீரில் விழுந்துவிட்டது. கிணற்றில் விழுந்த சிங்கம்   வெளியே வர முடியாமல் கிணற்றிற்கு​ள்ளே மாட்டிக் கொண்டது.

புத்திசாலி மான்

அதனை பார்த்த விலங்குகள் மரங்களின் பின்னால் குதூகலித்தன. சிங்கம் தனது ஆணவத்தினாலும் மானின் புத்திசாலித்தனாலும் தோற்றது. அதன் பிறகு அந்த காடு மிகவும் அமைதியாக மாறியது. மற்ற விலங்குகள் சந்தோஷமாக வாழ்ந்தன.

கதையில் நாம் பெறும் படிப்பினை.

புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான யோசனை வலிமையான எதிரிகளைவிட கூட வலிமையானதாக இருக்கலாம்.


துணிச்சலான சிறிய சிட்டுக்குருவி

 

Post a Comment

Previous Post Next Post