குரங்கு கதை - ​குரங்கும் ஆமையும்

குரங்கும் ஆமையும்

குரங்கும் ஆமையும்

ஒரு கிராமத்தில் பெரிய ஆற்றின் கரையில் ஒரு அழகான மாம்பழ மரம் இருந்தது. அந்த மரத்தில் இனிமையான மாம்பழங்கள் எப்போதும் நிறைந்து கிடந்தன. அந்த மரத்தில் ஒரு நல்ல மனம் கொண்ட குரங்கு வசித்தது வந்தது.

ஒரு நாள், ஒரு ஆமை ஆற்றின் கரையில் வந்து ஓய்வு எடுத்தது. குரங்கு அதை பார்த்து, "வணக்கம்! நீ மிகவும் சோர்வாக இருக்கிறாய். பசி எடுத்து விட்டதா? நான் உனக்கு மாம்பழம் தருகிறேன்" என்று சொன்னது.

ஆமை மகிழ்ச்சியுடன் மாம்பழங்களை சாப்பிட்டது. அதன் சுவை ஆமையை மிகவும் கவர்ந்தது. அதன்பிறகு தினமும் ஆமை அங்கே வந்து குரங்குடன் நட்பு செய்து, மாம்பழம் சாப்பிடத் தொடங்கியது.

குரங்கும் ஆமையும்

சில நாட்கள் கழித்து, ஆமை வீட்டுக்கு திரும்பியபோது, அதன் மனைவி கேட்டது:
"
நீ எப்போதும் மாம்பழம் சாப்பிட்டு வருகிறாய். யார் தருகிறார்கள்?"


ஆமை உண்மையைச் சொன்னது. எனக்கு ஒரு குரங்கு நண்பன் இருக்கின்றான். அவன் தருகின்றான் என்றது.

குரங்கும் ஆமையும்

அதற்கு பேராசை கொண்ட ஆமை மனைவி, "அந்த குரங்கு தினமும் இனிய மாம்பழம் சாப்பிடுகிறது என்றால், அதன் இதயம் மிகவும் இனிமையாக இருக்கும். எனக்கு அந்த குரங்கின் இதயம் வேண்டும்!" என்று சொன்னது.

ஆமை அதைக் கேட்டு கவலையடைந்தது. ஆனால் மனைவியின் வற்புறுத்தலால் குரங்கை ஏமாற்றத் திட்டமிட்டது.

அடுத்த நாள் ஆமை குரங்கிடம், "நீ எப்போதும் எனக்கு உதவி செய்கிறாய். அதனால் நீ என் வீட்டிற்கு விருந்தாளியாக வர வேண்டும்" என்றது.
நல்ல மனம் கொண்ட குரங்கு சம்மதித்து.  ஆமை முதுகில் ஏறியது.

குரங்கும் ஆமையும்

ஆற்றின் நடுவில் சென்றபோது, ஆமை உண்மையைச் சொன்னது: "என் மனைவிக்கு உன் இதயம் வேண்டும். அதனால்தான் உன்னை அழைத்து வந்தேன்." என்று.

குரங்கு புத்திசாலியாக சிரித்துக் கொண்டு, "அட ஆமையே! நான் என் இதயத்தை மரத்தில் விட்டுவிட்டேன். நீ என்னை மீண்டும் கரைக்கு கொண்டு போனால், அதை எடுத்து தருகிறேன்" என்றது.

ஆமை நம்பி கரைக்கு திரும்பியது. குரங்கு உடனே மரத்தில் பாய்ந்து ஏறி, ஆமையிடம், "மற்றவர்களின் உயிரைத் தீங்கு செய்ய நினைப்பது தவறு. பேராசை எப்போதும் கெடுதி​யையே தரும்"  என்று அறிவுரை கூறியது.

ஆமை தலைகுனிந்து சென்றது.

குரங்கும் ஆமையும்

இக்கதையில் இருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை.

பேராசை எப்போதும் நஷ்டத்தைத் தரும். நற்குணம் கொண்டவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.


ஏனைய சிறுவர் கதைகள்


Post a Comment

Previous Post Next Post